செய்திகள்
ஐபிஎல் 2020

ஐபிஎல் போட்டி ரத்தானால் பிசிசிஐ இழக்கும் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Published On 2020-04-08 10:24 GMT   |   Update On 2020-04-08 10:24 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வேகம் அதிகரித்து வருவதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது சந்தேகமாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அளவில் வருமானம் ஈட்டும் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் என்ற டி20 லீக்கை அறிமுகம் படுத்தியது. இது கோடிக்கணக்கில் வீரர்களை ஏலம் எடுத்து 8 அணிகள் கலந்து கொள்ளும் தொடராக நடத்தப்படுகிறது.

இந்தத் தொடர் உலகளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான பணம் கிடைக்கிறது. மேலும் தொலைக்காட்சி உரிமம் கோடிக்கணக்கில் கிடைத்தது. இதனால் ஐபிஎல் உலகின் அதிக வருமானம் ஈட்டும் டி20 லீக்காக உள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை தொடர் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ-க்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ 26 சதவிகித வருமானத்தை வீரர்களுக்கும், 13 சதவிகித வருமானத்தை சர்வதேச நட்சத்திரங்களுக்கும் கொடுக்கிறது. மீதமுள்ள பணத்தை உள்ளூர் கிரிக்கெட்டிற்கும், ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்காகவும் செலவழிக்கிறது.

சுமார் 150 கோடி ரூபாய் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், 70 கோடி ரூபாய் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் செலவிடுகிறது. ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு வருமானம் இழப்பு ஏற்பட்டால் வீரர்கள் சம்பளம் பிசிசிஐ-யின் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோர் ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். ரவி சாஸ்திரிக்கு 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
Tags:    

Similar News