செய்திகள்
பேஸ்பால் பயிற்சியாளர் பலி

அமெரிக்காவில் 30 வயதேயான பேஸ்பால் பயிற்சியாளர் கொரோனா தாக்கி பலி

Published On 2020-04-02 10:47 GMT   |   Update On 2020-04-02 10:47 GMT
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பேஸ்பால் விளையாட்டு ஆசிரியராக கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரேனா வைரஸ் தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் நகரம்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூஜெர்சியில் உள்ள கிளிஃப்சைட் பார்க் பள்ளியில் பேஸ்பால் பயிற்சியாளராக இருந்து வந்த 30 வயதேயான பென் லுடெரர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பென் லுடெரர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News