செய்திகள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சென்னை அணியினர்

ஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி

Published On 2020-03-07 16:34 GMT   |   Update On 2020-03-07 16:34 GMT
கோவாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்தி சென்னையின் எப்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கோவா:

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் எப்.சி.கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்து லீக் ஆட்டங்களில் சந்தித்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் எப்.சி.கோவா-சென்னையின் எப்.சி. அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கத்தில் இருந்தே கோவா அணி ஆக்ரோஷமாக விளையாடியது. அந்த அணி 10, 21 வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதி முடிவில் கோவா அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் சென்னை அணியினர் 52, 59வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.
தொடர்ந்து, 81, 83வது நிமிடங்களில் கோவா அணியின்ர் தலா ஒரு கோல் அடித்தனர். 

இறுதியில், கோவா அணி மொத்தம் 4 கோல்களும், சென்னை அணி 2 கோல்களும் அடித்தது. முதல் அரையிறுதியில் சென்னை அணி 4 கோல்களும், கோவா அணி ஒரு கோலும் அடித்திருந்தது. 

இதையடுத்து, இரு ஆட்டங்களிலும் சேர்த்து சென்னை அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Tags:    

Similar News