செய்திகள்
அரை சதம் அடித்த ஸ்மட்ஸ்

ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2020-03-07 15:47 GMT   |   Update On 2020-03-07 15:47 GMT
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்தி்ரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக லாபஸ்சாக்னே 108 ரன்கள் எடுத்திருந்தார்.

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேன்மேன் மாலன், டி காக் ஆடினர். அதிரடியாக விளையாடி டி காக் 2 சிக்சர் 2 பவுண்டரி எடுத்து மிரட்டினார். இந்நிலையில் இந்த 2 பேரையும் ஹசில்வுட் வெளியேற்றினார்.

இதனையடுத்து ஸ்மட்ஸ், வெர்ரெய்ன் ஜோடி சிறப்பாக விளையாடினர். வெர்ரெய்ன் அவ்வப்போது சிக்சர் மழையும் பொழிந்தார். இந்த ஜோடி 3 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர். 150 ரன்கள் இருக்கும் போது இந்த ஜோடியை ஆடம் சம்பா பிரித்தார். வெர்ரெய்ன் 50 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.

இந்நிலையில் ஸ்மட்ஸ்சுடன் கிளாசன் ஜோடி சேர்ந்து வெற்றியை நோக்கி பயணித்தனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மட்ஸ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவரில் 258 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த கிளாசன் 63 பந்துகளில் 68 ரன்களும் மில்லர் 3 ரன்களிலும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.
Tags:    

Similar News