செய்திகள்
பிரதமர் மோடி

உலக கோப்பை வெல்ல இந்திய, ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2020-03-07 13:58 GMT   |   Update On 2020-03-07 13:58 GMT
ஆஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ள உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய, ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோத வேண்டிய முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றில் முதல் இடத்தைப் பிடித்ததால் இந்தியா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ள உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, மகளிர் தினத்தில் சிறந்த இரு அணிகள் உலக கோப்பைக்காக விளையாட உள்ளன. இதில் தலைசிறந்த அணி வெற்றி பெறும். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் நாளை நீலக்கலராக காட்சி அளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News