செய்திகள்
பால் பேட்மிண்டன்

37 அணிகள் பங்கேற்கும் தேசிய பால் பேட்மிண்டன் சென்னையில் நாளை தொடக்கம்

Published On 2020-02-16 14:30 IST   |   Update On 2020-02-16 14:30:00 IST
இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள், 1200 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பால் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நாளை சென்னையில் தொடங்குகிறது.
செயின்ட் ஜோசப்ஸ் கல்வி குழுமம் மற்றும் தமிழ்நாடு பால் பேட்மிண்டன் சங்கம் சார்பில் 65-வது தேசிய சீனியர் பால் பேட்மின்டன் (பூப்பந்து) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி நாளை (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

இதில் 28 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள், 6 கல்வி நிறுவனங்கள் ஆக மொத்தம் இந்தியா முழுவதிலும் இருந்து 37 அணிகள் பங்கேற்கின்றன. 1200 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியை செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் பி. பாபு மனோகரன் தொடங்கி வைக்கிறார்.

Similar News