செய்திகள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் கேரளா வீரர்கள்

ஐஎஸ்எல் கால்பந்து - பெங்களூருவை வீழ்த்தியது கேரளா

Published On 2020-02-16 02:09 GMT   |   Update On 2020-02-16 02:09 GMT
கொச்சியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் பெங்களூரு அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது கேரளா அணி.
கொச்சி:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 164-வது நிமிடத்தில் பெங்களூரு அணி முதல் கோலை அடித்தது.

இரண்டாவது பாதியில் கேரளா அணி பொறுப்புடன் ஆடியது. அந்த அணியின் பர்த்லோமியூ 2 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், கேரளா அணி 2-1 என்ற கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதன்மூலம் கேரளா அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் தோற்றாலும், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடித்து வருகிறது.
Tags:    

Similar News