செய்திகள்
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்தது தென்ஆப்பிரிக்கா: காரணம் இதுவாம்....

Published On 2020-02-14 13:08 GMT   |   Update On 2020-02-14 13:08 GMT
வீரர்கள் வேலைப்பளு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட இருந்த டி20 தொடரை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தள்ளி வைத்துள்ளது.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் கிரிக்கெட் தொடர்களை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. இலங்கை, வங்காளதேசம் அணிகள் அங்கு சென்று விளையாடி விட்டன.

அடுத்ததாக தென்ஆப்பிரிக்கா அணியை வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தது. தென்ஆப்பிரிக்கா அணியும் மார்ச் மாதம் பாகிஸ்தான் வர சம்மதம் தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை அனுப்பவும் ஏற்பாடு செய்து வந்தது.

இந்நிலையில் வீரர்கள் எங்கள் நாட்டின் கொடைக்காலத்தில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அவர்களின் வேலைப்பளுவின் காரணமாக மார்ச் மாதம் பாகிஸ்தான் வர இயலாது. தொடரை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என தென்ஆப்பிரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடர் தள்ளிப்போகிறது.

தென்ஆப்பிரிக்கா அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

அதற்கு பின் இந்தியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் மார்ச் 18-ந்தேதி முடிவடைகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் மார்ச் 22-ந்தேதி முடிவடைகிறது. இரண்டிற்கும் இடையில் நான்கு நாட்கள் இருப்பதால் துபாயில் தங்கிய பின்னர் 22-ந்தேதிக்குப்பின் ராவல்பிண்டிக்கு தென்ஆப்பிரிக்கா அணியை அழைக்கலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.

ஆனால் 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். பெரும்பாலான தென்ஆப்பிரிக்கா வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் வேலைப்பளுவை காரணம் காட்டி பாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News