செய்திகள்
நவ்தீப் சைனி

டி20-யில் ஒவ்வொரு பந்திலும் வித்தியாசத்தை காட்டுவது முக்கியமானது: நவ்தீப் சைனி

Published On 2020-01-09 09:49 GMT   |   Update On 2020-01-09 09:49 GMT
140 கி.மீட்டர் வேகத்தில் துல்லியமான யார்க்கர், குட் பவுன்ஸ் போன்று விதியாசமான பந்துவீச்சை பயன்படுத்துவது முக்கியமானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அபாரமாக பந்து வீசினார். நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

சர்வதேச போட்டிகளில் போதுமான அனுபவம் இல்லாவிடிலும், குட் லெந்தில் பந்தை தொடர்ச்சியாக பிட்ச் செய்ததுடன், திடீர் திடீரென 140 கிலோ மீட்டர் வேகத்தில் யார்க்கர் பந்துகளையும் வீசினார். அத்துடன் பவுன்சர் பந்துகளையும் வீசினார்.

டி20 கிரிக்கெட்டில் இப்படி வித்தியாச வித்தியாசமான பந்துவீச்சை உபயோகிப்பது முக்கியமானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவ்தீப் சைனி கூறுகையில் ‘‘ஒயிட் பால், ரெட் பால் ஆகிய இண்டிலும் நம்பிக்கையை வளர்த்து கொண்டு வருகிறேன். நான் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனபோது வேகமாக பந்து வீச விரும்பினேன். ஆனால் தற்போது ஸ்லோ டெலிவரி பந்துகள் முக்கியமானது என்பதை தெரிந்து கொண்டேன்.

நான் மிகவும் சிறப்பான பயிற்சியை மேற்கொண்டேன். நம்பிக்கை அதிகமானது. நம்பிக்கை அதிகரிப்பதும், ஒவ்வொரு பந்துகளிலும் வித்தியாசம் காட்டுவதும் முக்கியமானது. யார்க்கர் பந்தில் விக்கெட் கிடைத்தது அதிகமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’’ என்றார்.

நவ்தீப் சைனி இந்திய அணிக்காக 8 டி20 போட்டிகளிலும், ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார்.
Tags:    

Similar News