செய்திகள்
ஜஸ்டின் லாங்கர்

இந்திய தொடர்: ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் லாங்கருக்கு ஓய்வு

Published On 2020-01-07 15:05 IST   |   Update On 2020-01-07 15:05:00 IST
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக மெக்டொனால்டு செயல்பட இருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த போட்டிகள் ஜனவரி 14-ந்தேதி, 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூருவில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி இந்தியா சுற்றுப் பயணத்தின்போது அந்த அணியின் தலைமை பயிற்சியளார் ஜஸ்டின் லாங்கர் உடன் வரவில்லை. அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மெக்டொனால்டு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

Similar News