செய்திகள்
கவுகாத்தி ஆடுகளத்தை உலர வைக்க பயன்படுத்திய ஹேர் டிரையர், அயன் பாக்ஸ்

பணக்கார கிரிக்கெட் போர்டு: பிட்ச்-ஐ உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ்- ரசிகர்கள் கிண்டல்

Published On 2020-01-06 09:57 GMT   |   Update On 2020-01-06 09:57 GMT
கவுகாத்தி டி20 போட்டியின்போது மழை நின்றபின் ஆடுகளத்தை உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் பயன்படுத்தியதால் பிசிசிஐ-யை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற இருந்தது. இரவு 6.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

7 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு தயாராக இருந்த நிலையில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்தது.

மழை நின்றதும் மைதான ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் வேலைகளை துரிதமாக செய்தனர். அவுட் பீல்டு பகுதியை டிரையாக்கினர். ஆனால் ஆடுகளம் (Pitch) ஈரப்பதமாக இருந்தது. அதை உலர செய்ய ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தினர். என்றாலும் பிட்ச் உலரவில்லை. இதனால் போட்டி கைவிடப்பட்டது.

உலகில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் பிசிசிஐ-தான் பணக்கார போர்டு. இவ்வளவு பணம் இருந்து்ம, நவநாகரீக காலத்தில் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் பயன்படுத்தியதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Tags:    

Similar News