செய்திகள்
ஸ்டீவன் பிளெமிங், ராஸ் டெய்லர்

டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர்: பிளெமிங்கை பின்னுக்கு தள்ளி ராஸ் டெய்லர் சாதனை

Published On 2020-01-06 09:00 GMT   |   Update On 2020-01-06 09:00 GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஸ்டீபன் பிளெமிங்கிடம் இருந்து ரஸ் டெய்லர் பறித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த தொடக்க பேட்ஸ்மேனும் ஆன ஸ்டீவன் பிளெமிங் 111 டெஸ்டில் 9 செஞ்சூரி, 46 அரைசதங்களுடன் 7172 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.06 ஆகும்.

இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. இவரது சாதனையை ராஸ் டெய்லர் நெருங்கி வந்தார்.

இன்றுடன் முடிவடைந்த சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ராஸ் டெய்லர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 20 ரன்னைத் தொட்டபோது ஸ்டீபன் பிளெமிங் சாதனையை முறியடித்தார். ராஸ் டெய்லர் 99 டெஸ்டில் 19 சதம், 33 அரைசதங்களுடன் 7174 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 46.28.

35 வயதாகும் ராஸ் டெய்லர் ஏற்கனவே 228 ஒருநாள் போட்டிகளில் 8371 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சாதனைப் படைத்த ராஸ் டெய்லருக்கு பிளெமிங், மெக்கல்லம் உள்ளிட்டோம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News