செய்திகள்
இரு கோல் அடித்த சுனில் சேத்ரி

ஐஎஸ்எல் கால்பந்து - கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு

Published On 2020-01-03 16:44 GMT   |   Update On 2020-01-03 16:44 GMT
கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு எப்.சி. அணி.
பெங்களூரு:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் கோவா அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனாலும், முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி 59வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோவா அணியின் ஹியூகோ பவுமாஸ் 61 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.
 
ஆட்டம் முடிவதற்கு சிறிது நேரம் முன்னதாக, 84வது நிமிடத்தில் சுனில் சேத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் பெங்களூரு அணி தான் ஆடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்து 19 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கோவா அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 6 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 21 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
Tags:    

Similar News