செய்திகள்
கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய கோலி

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய 'கிங் கோலி’

Published On 2019-12-21 17:18 IST   |   Update On 2019-12-21 17:18:00 IST
கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி அங்கிருந்த குழந்தைகளை இன்பவெள்ள்த்தில் ஆழ்த்தினார்.
கொல்கத்தா:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

இதற்கிடையில், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் புதன்கிழமை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்படுகள் உலகம் முழுவதும் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கொல்கத்தாவில் உள்ள ஒரு காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். 



அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சென்ற கோலி குழந்தைகள் விரும்பிய பரிசுகளை கொடுத்து மகிழ்வித்தார். இறுதியில், குழந்தைகளிடம் உங்களுக்கு கிரிக்கெட் வீரரை பார்க்க விருப்பமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆம் என குழந்தைகள் பதிலளித்தனர். 

இதையடுத்து, தனது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தை விராட் கோலி கலைத்தபோது அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தனர். 

பின்னர் அந்த குழந்தைகளுடன் இணைந்து கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். கோலி ஆதரவற்ற குழந்தைகளுடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை ஸ்டார்ஸ் போர்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Similar News