செய்திகள்
டெம்பா பவுமா

இங்கிலாந்து டெஸ்ட்: காயத்தால் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து பவுமா விலகல்

Published On 2019-12-20 15:27 IST   |   Update On 2019-12-20 15:27:00 IST
இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இருந்து தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் பவுமா விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. டிசம்பர் 26-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக முதல் போட்டி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டெம்பா பவுமா இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

இதில் இருந்து அவர் குணமாக ஏழு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

Similar News