செய்திகள்
ரிஷப் பந்த்

அதிரடியில் கலக்கிய ஷ்ரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பண்ட்

Published On 2019-12-19 09:42 GMT   |   Update On 2019-12-19 09:42 GMT
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் அய்யர்- ரி‌ஷப் பண்ட் அதிரடியாக விளையாடினர். அவர்கள் 24 பந்தில் 73 ரன் குவித்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சேஸ் வீசிய 47-வது ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 31 ரன் எடுக்கப்பட்டது. ஒரு ஓவரில் இந்தியா எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக (1999-ம் ஆண்டு) தெண்டுல்கர்- அஜய் ஜடேஜா ஜோடி ஒரு ஓவரில் 28 ரன் எடுத்து இருந்தது. அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 32 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் சேர்த்தார்.



இந்தியா 350 ரன் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிடில் ஆர்டர் வரிசையில் ஷ்ரேயாஸ்- ரி‌ஷப் பண்ட் அதிரடியால் 387 ரன் எடுத்தது. இந்திய வீரர்களில் அஜித் அகர்கர் 21 பந்தில் அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை ரி‌ஷப் பண்ட் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் 16 பந்தில் 39 ரன்னில் அவுட் ஆனார். காட்ரெல் வீசிய 46-வது ஓவரில் ரிஷப் பண்ட் 3 பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் அடித்தார்.
Tags:    

Similar News