செய்திகள்
கேன் வில்லியம்சன்

இங்கிலாந்து 353 ரன்னில் ஆல்-அவுட்: நியூசிலாந்து திணறல்

Published On 2019-11-22 08:26 GMT   |   Update On 2019-11-22 08:26 GMT
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்அவுட் ஆக, நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்துள்ளது.
  • இங்கிலாந்து 353 ரன்னில் ஆல்அவுட். பென் ஸ்டோக்ஸ் 91 ரன், டிம் சவுத்தி நான்கு விக்கெட்
  • கேன் வில்லியம்சன் அரைசதம்
  • நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 144
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானுயில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்தது. பேர்ன்ஸ் 52 ரன்னும், ஜோ டென்லி 74 ரன்னும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 67 ரன்னுடனும், போப் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பென் ஸ்டோக்ஸ் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். போப் 29 ரன்னும், ஜோஸ் பட்லர் 48 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து 124 ஓவரில் 353 ரன்னும் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், வாக்னர் 3 விக்கெட்டும், கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டும், போல்ட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் டாம் லாதம் 8 ரன்னிலும், ஜீத் ராவல் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.



அடுத்து கேப்டன் வில்லியம்சன்- ராஸ் டெய்லர் ஜோடி நிதானமாக விளையாடியது. என்றாலும் இந்த ஜோடியால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. ராஸ் டெய்லர் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நிக்கோல்ஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News