செய்திகள்
சுனில் கவாஸ்கர்

சகாரா பாலைவனத்திலும், ஐஸ்லாந்து பனியிலும் கூட இந்திய அணி வெற்றி பெறும்: கவாஸ்கர்

Published On 2019-11-21 14:13 GMT   |   Update On 2019-11-21 14:13 GMT
சகாரா பாலைவனம் என்றாலும், ஐஸ்லாந்து பனி என்றாலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நாளை தொடங்குகிறது. இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இரண்டு அணிகளுக்கும் பிங்க்-பால் மேட்ச் புதிது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரகானே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு பிங்க்-பாலில் விளையாடிய அனுபவம் கிடையாது. என்றாலும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர்.

அனுபவம் இல்லாத நிலையில் இந்திய அணி எப்படி விளையாடும் என்ற பார்வையும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் என்ற கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘இது மிகவும் சிறப்பு வாய்ந்த இந்திய அணி. ஐஸ்லாந்தில் உள்ள பனியில் விளையாடினாலும், சாகாரா பாலைவனத்தில் உள்ள மணலில் விளையாடினாலும் அவர்களால் வெற்றிக்கான வழிகளை தேட முடியும். இதனால் இதற்கு முன் பிங்க்-பாலில் விளையாடினார்களா? அல்லது இல்லையா? என்பது ஒரு விஷயமே அல்ல.

பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட்டை ரெட்-பால் டெஸ்டில் இருந்து தனிப்பட்ட முறையில் பாரமரிக்க வேண்டும். லிமிடெட் ஓவர்ஸ் கிரிக்கெட் ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து எப்படி மாறுபட்டது என்பதற்கான புள்ளி விவரங்கள் இருக்கிறதோ, அதேபோன்று அல்லது வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் குறிப்பிட்ட வரையறையை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News