செய்திகள்
விருத்திமான் சஹா

எந்த நிற பந்திலும் மிரட்டக்கூடியவர் ஷமி - விருத்திமான் சஹா

Published On 2019-11-21 04:46 GMT   |   Update On 2019-11-21 04:46 GMT
முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பவுலராக உருவெடுக்கக்கூடியவர் என்றும் எந்த நிற பந்திலும் மிரட்டக்கூடியவர் என்றும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கூறினார்.
வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போது இருக்கும் பார்மில் பிங்க் பந்து என்ன எந்த பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குறிப்பாக முகமது ஷமி எந்த ஆடுகளத்திலும் அபாயகரமான பவுலராக உருவெடுக்கக்கூடியவர். அவரது வேகமும், பந்தை ரிவர்ஸ்விங் செய்யும் திறமையுமே அதற்கு சான்று. களத்தில் பிங்க் பந்தின் நகரும் தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் எங்களது பவுலர்களின் உத்வேகம், ஆட்டத்திறனுக்கு முன் பந்தின் நிறம் ஒரு பிரச்சினையே இல்லை. வெளிச்சம் மங்கும் நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக அமையும். எது எப்படி என்றாலும் இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். பிங்க் பந்தின் மினுமினுப்பை பார்க்கும்போது, ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆவதற்கு வாய்ப்பு குறைவு தான்.

இவ்வாறு சஹா கூறினார்.
Tags:    

Similar News