செய்திகள்
மயங்க் அகர்வால்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்

Published On 2019-11-15 07:37 GMT   |   Update On 2019-11-15 07:37 GMT
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான மயங்க அகர்வால் சதமடித்து அசத்தினார்.
இந்தூர்: 

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில்  நேற்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில்  சுருண்டது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும்  களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. புஜாரா 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும்  களத்தில் இருந்தனர். 

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த  கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க்  அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார். 

தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகள்  இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. அகர்வால் 111 ரன்களுடனும், ரகானே 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News