செய்திகள்
எம்எஸ் டோனி

டென்னிஸ் தொடரில் களம் இறங்கும் எம்எஸ் டோனி

Published On 2019-11-08 18:42 IST   |   Update On 2019-11-08 18:42:00 IST
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி டென்னிஸ் தொடரில் களம் இறங்க இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி, தற்போது ஓய்வில் இருக்கிறார். ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய பின், ஜார்க்கண்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார்.

கிரிக்கெட்டை தவிர்த்து கால்பந்து மீது அதிக நாட்டம் கொண்ட எம்எஸ் டோனி டென்னிஸ் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவாராம். கடந்த முறை நடைபெற்ற கிரிக்கெட் கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த முறையும் டென்னிஸ் விளையாட இருக்கிறாராம். இதற்காக அவர் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற தொடரில், இரட்டையர் பிரிவில் உள்ளூர் வீரரான சுமித் குமார் உடன் இணைந்து 6-3, 6-3 என வெற்றி பெற்றிருந்தார்.

Similar News