செய்திகள்
பாபர் அசாம்

2-வது டி20 கிரிக்கெட்: ஸ்மித் அதிரடியால் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2019-11-05 12:16 GMT   |   Update On 2019-11-05 12:16 GMT
கான்பெர்ராவில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்மித்தின் அபார ஆட்டத்தில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.
  • பாபர் அசம் 50 ரன்னும், இப்திகார் அகமது 62 ரன்னும் அடித்தனர்.
  • வார்னர் 20 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 17 ரன்களும் சேர்ப்பு
  • மூன்று போட்டிகள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் பேட்டி கான்பெர்ராவில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாபர் அசாம், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 2 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 14 ரன்னிலும், ஆசிஃப் அலி 4 ரன்னிலும் வெளியேறினர்.

பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி  ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 62 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.



பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங்கை தொடங்கியது. டேவிட் வார்னர் 20 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது வீரராக களம் இறங்கிய ஸ்மித் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 80 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டி மழையால் கைவிடபட்டதால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
Tags:    

Similar News