செய்திகள்
சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து அணி

டி20 உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடரில் நெதர்லாந்து சாம்பியன்

Published On 2019-11-03 10:45 GMT   |   Update On 2019-11-03 10:45 GMT
டி20 உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடர் இறுதிப் போட்டியில் பபுவா நியூ கினியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து.
டி20 உலகக்கோப்பைக்கான குவாலிபையர் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது. இதில் நெர்தலாந்து - பபுவா நியூ கினியா அணிகள் இறுதிப்  போட்டிக்கு முன்னேறின.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பபுமா நியூ கினியா 20 ஓவரில் 8 விகெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது. பின்னர்129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களம் இறங்கியது.

அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து சாம்பியன் பட்டம் வென்றது.
Tags:    

Similar News