செய்திகள்
டு பிளிசிஸ், விராட் கோலி

டெஸ்ட் போட்டியில் டாஸ் சுண்டும் முறையை நீக்க வேண்டும்: டு பிளிசிஸ்

Published On 2019-10-28 15:08 GMT   |   Update On 2019-10-28 15:08 GMT
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழப்பதற்கு டாஸ் தோல்வியும் முக்கிய காரணம் என கருதுகிறார் டு பிளிசிஸ்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான் டாஸ் வென்றார்.

டாஸ் வெல்வதுதான் முக்கியம் எனக் கருதிய டு பிளிசிஸ், கடைசி போட்டியில் தனக்கு ராசியில்லை எனக் கூறி மாற்று வீரரை டாஸ் கேட்க அனுப்பினார். அப்போதும் தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பில்லை.

இதனால் டாஸ் சுண்டப்படும் முறையை நீக்கினால், அது மற்ற நாடுகளுக்குச் செல்லும் அணிக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 500 ரன்களுக்கு மேல் குவித்து, பின்னர் டிக்ளேர் செய்து மாலை நேரத்தில் எங்களை பேட்டிங் செய்ய வைத்தனர்.

சூரியன் மறையும் நேரத்தில் அவர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்திவிட்டார்கள். அதன்பின் அடுத்த நாள் காலை நாங்கள் விளையாடும்போது நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியுள்ளது. மூன்று போட்டிகளிலும் அப்படியே நடந்தது.

இந்தியாவில் நடைபெற்ற கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் மூன்று முறைதான் 2-வது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை இந்தியாவும், ஒரு முறை அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 33 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது.

டாஸ் சுண்டப்படுவது ரத்து செய்யப்பட்டால் அது ஒரு நாட்டிற்கு சென்று விளையாடும் அணிக்கு சிறந்ததாக இருக்கும். தென்ஆப்பிரிக்காவில் இதை நான் நினைக்கவில்லை. புற்கள் நிறைந்து இருக்கும் ஆடுகளத்தில் எப்போது வேண்டுமென்றாலும் நாங்கள் பேட்டிங் செய்வோம்’’ என்றார்.
Tags:    

Similar News