செய்திகள்
பப்புவா நியூ கினியா அணி

பப்புவா நியூ கினியா டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி

Published On 2019-10-28 19:07 IST   |   Update On 2019-10-28 19:07:00 IST
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட பப்புவா நியூ கினியா அணி தகுதிப் பெற்றுள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாயில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் முதல் இடம் பிடித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

‘பி’ பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ரன் விகிதம் அடிப்படையில் முதல் இடத்தை பிடித்தது. இதன்மூலம் அயர்லாந்து அணியும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.



இந்த இரண்டு அணிகளையும் தவிர மேலும் நான்கு அணிகள் குரூப் நிலைக்கு தகுதி பெறும். குரூப் நிலையில் இலங்கை, வங்காளதேசம் உள்பட 8 அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

Similar News