செய்திகள்
டி10 கிரிக்கெட் லீக்

‘T10’ கிரிக்கெட் லீக்: வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை திரும்பப் பெற்றது பாகிஸ்தான்

Published On 2019-10-23 15:08 GMT   |   Update On 2019-10-23 15:08 GMT
அபுதாபியில் நடைபெற இருக்கும் டி10 கிரிக்கெட் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அபுதாபியில் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான லீக் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது.

தற்போது அந்த தடையில்லா சான்றிதழ் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் டி10 லீக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீரர்களின் உடற்தகுதி, வேலைப்பளு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இந்த முடிவால் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகித் அப்ரிடி, முகமது ஹபீஸ், இமாத் வாசிம், பஹீம் அஷ்ரப், இம்ரான் நசீர் ஆகியோரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News