செய்திகள்
சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் விராட் கோலி: அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு- கங்குலி

Published On 2019-10-23 10:55 GMT   |   Update On 2019-10-23 10:55 GMT
கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் முக்கியமான நபர். எனது முழு ஆதரவும் அவருக்கு உண்டு என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இன்று அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

தலைவர் பதவியை ஏற்ற பிறகு அவர் பேசுகையில் ‘‘இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் கேப்டன் விராட் கோலி. அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டும். நாளை அவருடன் பேச இருக்கிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘நம்பகத்தன்மையில் எந்த சமரசமும் இல்லை. இந்திய அணியின் கேப்டனாக எப்படி செயல்பட்டனோ, அதேபோல் பிசிசிஐ-யை வழி நடத்துவேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலமாக்குவது எப்படி என்பது குறித்து ஆராய வேண்டும்.

கிரிக்கெட் போட்டியில் பல மாற்றங்களை கொண்டு வருவது சிறந்தது அல்ல. மாற்றங்களை கொண்டு வரும்போது போட்டியை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. இதுவரை எம்எஸ் டோனியை நான் சந்திக்கவில்லை. சந்தித்த பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையிலான உறவு இணக்கமானதாக இருக்கும். அவர் இந்திய அணியை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். முதல்தர கிரிக்கெட் மீது அதிக கவனம் செலுத்தப்படும். ரஞ்சி டிராபியை சிறந்த போட்டித் தொடராக உருவாக்குவோம். டோனி, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா போன்றோர் அங்கிருந்து வந்தவர்கள்தான்’’ என்றார்.
Tags:    

Similar News