செய்திகள்
விஜய் ஹசாரே டிராபி

விஜய் ஹசாரே டிராபி: பெங்கால், மத்திய பிரதேசம், குஜராத் அணிகள் வெற்றி

Published On 2019-09-30 15:48 GMT   |   Update On 2019-09-30 15:48 GMT
விஜய் ஹசாரே டிராபி தொடரில் பெங்கால், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் இன்று மூன்று போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்றன.

ஒரு ஆட்டத்தில் ஜம்மு&காஷ்மீர் - பெங்கால் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு&காஷ்மீர் பெங்கால் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷான் பொரேலின் அபார பந்து வீச்சால் 169 ரன்னில் சுருண்டது. பொரேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்கால் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கோஸ்வாமி (86), ஈஸ்வரன் (51) சிறப்பாக விளையாட 28 ஓவரிலேயே வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பீகார் - மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பீகார் 137 ரன்னில் சுருண்டது. பின்னர் மத்திய பிரதேசம் 27.4 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3-வது ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் பர்கவ் மேராய் (125) சதத்தால் 305 ரன்கள் குவித்தது. பின்னர் 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திரிபுரா களம் இறங்கியது. மிலிந்த் குமார் (103) சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க திரிபுரா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களே அடித்தது. இதனால் குஜராத் 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News