செய்திகள்
சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்

பாபர் அசாம் சதத்தால் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 305 ரன்கள் குவிப்பு

Published On 2019-09-30 13:57 GMT   |   Update On 2019-09-30 13:57 GMT
கராச்சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் சதம் அடிக்க பாகிஸ்தான் 305 ரன்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.4 ஓவரில் 73 ரன்கள் சேர்த்தது. இமாம் உல் ஹக் 31 ரன்னிலும், பகர் ஜமான் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.



அடுத்து வந்த துணைக் கேப்டன் பாபர் அசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த நாட்டில் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அவர், 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்தார்.



ஹரிஸ் சோஹைல் 48 பந்தில் 40 ரன்களும், இப்திகார் அகமது 20 பந்தில் 32 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்துள்ளது. பின்னர் 306 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News