செய்திகள்
நேபாளம் டி20 கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது சிங்கப்பூர்

Published On 2019-09-30 12:02 GMT   |   Update On 2019-09-30 12:02 GMT
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சிங்கப்பூர்.
சிங்கப்பூரில் ஜிம்பாப்வே, சிங்கப்பூர், நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிங்கப்பூர் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஆட்டம் 18 ஓவர்களாக குறைப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் டேவிட் (41), மான்ப்ரீத் சிங் (41), ரோகன் (39) ஆட்டத்தால் 18 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிங்கப்பூர் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சகப்வா (48), 3-வது வீரர் வில்லியம்ஸ் (66), அடுத்து வந்த முட்டோம்போட்ஜி (32) குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடினர்.

அதன்பின் வந்தவர்கள் சொதப்பியதால் ஜிம்பாப்வே அணியால் 18 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177  ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சிங்கப்பூர் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும், ஐசிசியின் முழு உறுப்பினர் நாடான ஜிம்பாப்வேயை, இணை உறுப்பினர் நாடான சிங்கப்பூர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News