செய்திகள்

ரிஷப் பந்த் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்: குயின்டான் டி காக்

Published On 2019-03-28 15:47 IST   |   Update On 2019-03-28 15:47:00 IST
தனது ஷாட்டில் அதிக வலிமையை பெற்றிருக்கும் ரிஷப் பந்த் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார் என குயின்டான் டி காக் தெரிவித்துள்ளார். #IPL2019
ஐபிஎல் தொடரின் 12 சீசன் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 27 பந்தில் தலா 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 2-வது ஆட்டத்தில் 13 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.

வருங்காலத்தில் இந்திய அணியின் மிகப்பெரிய வீரராக திகழ்வார் என்று விமர்சகர்கள் கணித்துள்ளனர். இவருடன் தென்ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குயின்டான் டிக் காக் டெல்லி அணியில் இணைந்து விளையாடிவர்.

இவர் ரிஷப் பந்த் குறித்து கூறுகையில் ‘‘நான் ரிஷப் பந்த் உடன் இணைந்து விளையாடியுள்ளேன். அவர் மிகவும் குறுகிய காலத்தில் விரைவாக வளர்ந்துள்ளதை பார்க்கிறேன். அவரது ஷாட்டில் அதிக அளவு பவர் உள்ளது. அவர் மிகவும் வலுவான வீரர். இந்திய அணியின் மிகப்பெரிய சொத்தாக வளர்ந்து வருகிறார்’’ என்றார்.
Tags:    

Similar News