செய்திகள்

பெண்கள் கிரிக்கெட்: இங்கிலாந்தை 66 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Published On 2019-02-22 11:55 GMT   |   Update On 2019-02-22 11:55 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDWvENGW
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் ரோட்ரிக்ஸ், மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள்.

ரோட்ரிக்ஸ் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மந்தனா 24 ரன்கள் சேர்த்தார். கேப்டன் மிதலி ராஜ் 44 ரன்களும், பாட்டியா 25 ரன்களும், கோஸ்வாமி 30 ரன்களும் சேர்க்க இந்தியா 49.4 ஓவரில் 202 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

அதன்பின் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். ஸ்கிவர் 44 ரன்களும், நைட் 39 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 136 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனைகள் தீப்தி ஷர்மா, பாண்டே தலா இரண்டு விக்கெட்டுக்களும் பிஸ்ட் நான்கு விக்கெட்டுக்களும் கைப்பற்றினர்.
Tags:    

Similar News