செய்திகள்

தேசிய இளையோர் தடகளம்: தமிழக அணிக்கு 44 பேர் தேர்வு

Published On 2019-02-14 14:43 IST   |   Update On 2019-02-14 14:43:00 IST
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற இருக்கும் தேசிய இளையோர் தடகளத்திற்கான தமிழக அணியில் 44 வீரர்கள்- வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
16-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக தடகள அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆண்கள் அணியில் ஜாய் அலெக்ஸ், கார்த்திகேஷ், நாகர்ஜூனன், பிரனாவ், மாரியப்பன், சித்தார்த், விக்ரமன், அரவிந்த், தேவ கார்த்திக், லலித் குமார், அசத்துல்லா முஜாஹித், டேவிட் சக்தி மகேந்திரன், லோகேஷ்குமார் உள்பட 20 வீரர்களும், பெண்கள் அணியில் மரிய நிவேதா, சத்ய ஸ்ரீ, பபிதா, பத்ம பாரதி, துர்கா, ‌ஷப்னா ஷெரின், ஹேமலதா, தபிதா, அட்சயா, சினேகா, பவித்ரா, கெவினா, காவ்யா, ‌ஷர்மிளா, ஜனனி, தீபிகா உள்பட 24 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News