செய்திகள்

ரிஷப் பந்த் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு: குமார் சங்ககரா

Published On 2019-02-13 12:28 GMT   |   Update On 2019-02-13 12:28 GMT
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என்று இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார். #RisshabhPant
இந்திய அணியின் தலைசிறந்த வீரரான எம்எஸ் டோனி கடந்த 2004-ல் இருந்து சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். 37 வயதாகும் டோனி உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு எம்எஸ் டோனிக்கு மிகவும் சிறப்பானதாக இல்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டியிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

டோனியின் ஆட்டத்திறன் குறைந்து வரும் நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் அவரது இடத்தை பிடிக்க தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும், ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து குமார் சங்ககரா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும், அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது. அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியது. அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

உலகக்கோப்பை என்று வரும்போது அனுபவ வீரர்கள் அதிக அளவில் இருப்பார்கள். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் டோனிக்கு கட்டாயம் இடமிருக்கும். இக்கட்டான நிலையில் விராட் கோலி டோனியுடன் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News