செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் கிவிட்டோவா

Published On 2019-01-24 05:43 GMT   |   Update On 2019-01-24 05:43 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரோ கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #Kvitova #DanielleCollins #AUSOpen
மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செக்குடியரசுவை சேர்ந்த 8-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா - டேனிலி ரோஸ் கோலின்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள்.

டேனிலி ரோஸ் கோலின்ஸ்

இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

கிவிட்டோவா இறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா (செக்குடியரசு) அல்லது ஒசாகாவுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

                               பிளிஸ்கோவா                                            ஒசாகா

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று பிற்பகல் நடைபெறும் அரையிறுதியில் ரபெல் நடால் (ஸ்பெயின்)- சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள். நடால் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளார்.

சிட்சிபாஸ் 4-வது சுற்றில் பெடரரை வீழ்த்தி இருந்ததால் நடாலுக்கு கடும் சவாலாக விளங்குவார். #Kvitova #DanielleCollins #AUSOpen
Tags:    

Similar News