செய்திகள்

ஒருநாள் போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார் எம்எஸ் டோனி

Published On 2018-07-12 16:55 IST   |   Update On 2018-07-12 16:55:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது 10 ஆயிரம் ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் எம்எஸ் டோனி. #ENGvIND #ViratKohli
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனும் ஆன எம்எஸ் டோனி இரண்டு உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனைப் படைத்தவர். அத்துடன் பேட்டிங், விக்கெட் கீப்பர், கேப்டன் பொறுப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்களை கேட்ச் பிடித்து வெளியேற்றி சாதனைப் படைத்தார். அத்துடன் 50-ற்கு மேற்பட்ட கேட்ச்களை பிடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

இன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மற்றொரு சாதனைப் படைக்க இருக்கிறார். இதுவரை எம்எஸ் டோனி 318 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதத்துடன் 9967 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.37 ஆகும். இந்த தொடரில் இன்னும் 33 ரன்கள் அடித்தால், 10 ஆயிரம் ரன்கள் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்றும், 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெறுவார்.



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரும் 10 ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் சங்ககரா 14234, ரிக்கி பாண்டிங் 13704 ரன்கள் குவித்துள்ளனர்.
Tags:    

Similar News