செய்திகள்

பிலிப் கவுட்டினோ பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய சக வீரர்கள் - படங்கள்

Published On 2018-06-12 20:03 IST   |   Update On 2018-06-12 20:03:00 IST
பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான பிலிப் கவுட்டினோவின் பிறந்த நாளை சக வீரர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.
ரஷியாவில் நாளைமறுநாள் கால்பந்து உலகக் கோப்பை திருவிழா தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள அனைத்து அணிகளும் ரஷியா சென்றுள்ளது. கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் அணிகள் ஒன்று பிரேசில். இந்த அணியில் பார்சிலோனா கிளப் அணிக்காக மிட்பீல்டராக களம் இறங்கி விளையாடி வரும் பிலிப் கவுட்டினோ இடம்பிடித்துள்ளார்.



இன்று கவுட்டினோவிற்கு 26 வயது நிறைவடைந்து 27-வது வயது பிறக்கிறது. இவரது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாட சக வீரர்கள் முடிவு செய்தனர். அதன்படி மைதானத்தில் பயிற்சி முடிந்த பிறகு பிரேசில் வீரர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். அவரை சுற்றி மற்ற முன்னணி வீரர்களான நெய்மர், மார்சிலோனா போன்றோர் அமர்ந்திருந்தனர்.



திடீரென அனைவரும் கவுட்டினோவை சுற்றி வளைத்து அவரது தலையில் முட்டையை உடைத்து அபிஷேகம் செய்தனர். அதன்பின் மாவு, பால் ஆகியவற்றையும் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத கவுட்டினோ அதிர்ச்சியடைந்தார்.


















Tags:    

Similar News