செய்திகள்

பதக்கம் வென்ற வீரர்களின் பென்சன் இரண்டு மடங்காக உயர்வு- விளையாட்டுத்துறை அமைச்சகம்

Published On 2018-06-08 15:12 IST   |   Update On 2018-06-08 15:12:00 IST
சர்வதேச அளவில் சாதனைப் படைத்து பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான பென்சன் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்வது உண்டு. பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலம், இந்திய அரசு ஊக்கத்தொகை வழங்கி மகிழ்விக்கும்.

வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஓய்வு பெற்றபின் அவர்களுக்கு ஓய்வு ஊதியமும் வழங்கப்படும். தற்போது அந்த ஓய்வூதியம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பென்சனாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பென்சன் கொள்கையின்படி 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பாராலிம்பிக்ஸில் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் இதே தொகை வழங்கப்படும்.



உலகக்கோப்பை, ஆசிய போட்டியில் தங்கம் வெல்லும் நபர்களுக்கு 16 ஆயிரம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பென்சன் தொகைக்கு விண்ணப்பம் செய்திருக்கும்போது தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது 30 வயதை தாண்டியிருக்க வேண்டும். தற்போது பென்சன் தொகை வாங்கி வரும் முன்னாள் வீரர்களுக்கு இந்த திட்டம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்தே நடைமுறைக்கு வந்துள்ளது.
Tags:    

Similar News