செய்திகள்

கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் வாட்ச் அணிய தடை - ஐசிசி ஊழல் தடுப்புத்துறை

Published On 2018-05-25 06:16 GMT   |   Update On 2018-05-25 06:16 GMT
கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனம் உட்பட செய்திகள் அனுப்பும் புதியரக கைக்கடிகாரத்தை போட்டியின் போது அணியக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. #ICCanticorruption
லண்டன்:

கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது ஐசிசி-யின் விதிமுறைகள் படி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் செல்போன்கள் மற்றும் செய்தி தொடர்பு சாதனங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. போட்டி முடிவடைந்த பின்னரே உபயோகிக்க முடியும். போட்டியின் போது சூதாட்டத்தை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் வாட்ச் மூலம் செய்திகளை பரிமாற முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அப்போது கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிந்திருந்தனர். இதனால் ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் வீரர்களிடம் இதுகுறித்து தெரிவித்தனர். இதன் பின் அணிய மாட்டோம் என வீரர்கள் உறுதி அளித்தனர். #ICCanticorruption

Tags:    

Similar News