செய்திகள்

அபாரமான பீல்டிங்கால் நியூசிலாந்தை 223 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து

Published On 2018-02-28 11:17 IST   |   Update On 2018-02-28 11:17:00 IST
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 223 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 30 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர்  49.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து 223 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக சான்ட்னர் 63 ரன்கள் (நாட் அவுட்) ரன்கள் எடுத்தார். துவக்க வீரர் குப்தில் 50 ரன்களும், கிராண்ட்ஹோம் 38 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், அலி, ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

குறிப்பாக பீல்டிங்கில் இங்கிலாந்து வீரர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டனர். 4 வீரர்களை ரன் அவுட் செய்தனர். ஜேசன் ராய் அபாரமான 2 கேட்சுகள் பிடித்தது திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதையடுத்து 224 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Similar News