செய்திகள்

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்: ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்தது

Published On 2017-04-14 12:36 GMT   |   Update On 2017-04-14 12:36 GMT
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேனான மொகமது சேஷாத்தை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமாக திகழந்து வருபவர் மொகமது ஷேசாத். ஆப்கானிஸ்தான் அணிக்காக 2010-ம் ஆண்டில் அறிமுகமான சேஷாத், 58 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி துபாயில் உள்ள ஐ.சி.சி. அகாடமியில் ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டது. இந்த மாதிரியை சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட க்ளென்புடரால் (Clenbuterol) என்ற ஒருவகை ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

இதனால் மொகமது ஷேசாத் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது. ‘‘இந்த தடை வரும் 26-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன் அவர் மேல்முறையீடு செய்து தனக்கெதிரான குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும்’’ என்று ஐ.சி.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

Similar News