செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல். ராகுல் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 17-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், காயத்தினால் போட்டியில் பங்கேற்காமல் இருந்த ராகுல் முழு உடல் தகுதி பெற்ற நிலையில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அஜய் ஷிர்கே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினம் நகரில் வருகிற 2016, நவம்பர் 17-ல் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலை இந்திய அணியில் சேர்ப்பது என அனைத்து இந்திய மூத்த தேர்வு குழு முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ராகுல் காயத்தில் இருந்து முழுவதும் சரியாகி விட்டதாகவும், அவர் அணியில் இன்று சேருவார் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
ராகுல் கர்நாடக அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார். அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்து வரும் போட்டியில் 76 மற்றும் 106 ரன்களை எடுத்துள்ளார். ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கவுதம் காம்பீர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என தெளிவாக தெரிய வந்துள்ளது.
அவர் ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 29 மற்றும் 0 ரன்களே எடுத்துள்ளார். முதல் இன்னிங்சில் ஸ்டுவர்ட் பிராட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த காம்பீர் 2-வது இன்னிங்சில் கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.