செய்திகள்

ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட எச்டிசி யு11 வெளியிடப்பட்டது

Published On 2017-05-16 15:33 IST   |   Update On 2017-05-16 15:33:00 IST
எச்டிசி நிறுவனத்தின் எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் தாய்வானில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எட்ஜ் சென்ஸ் வசதி கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய எச்டிசி யு11 ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

எச்டிசி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான யு11-ஐ தாய்வானில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் எனும் ஆப்ஷன் அமேசிங் சில்வர், சஃபையர் புளூ, பிரில்லியண்ட் பிளாக், ஐஸ் வைட் மற்றும் சோலார் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. 

புத்தம் புதிய எச்டிசி யு11 உலகம் முழுக்க இந்த மாதம் வெளியிடப்படும் என்றும் இதன் விலை EUR 749 அதாவது இந்திய மதிப்பில் ரூ.53,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் குவாட் எச்டி 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் எல்சிடி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளமும், எச்டிசி சென்ஸ் ஸ்கின் வழங்கப்பட்டுள்ளது. 



போனின் வேகத்தை கவனிக்க 2.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  

புகைப்படங்களை எடுக்க எச்டிசியு 11 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, 1.4 அல்ட்ரா பிக்சல், அல்ட்ரா ஸ்பிரெட் ஆட்டோஃபோகஸ், f/1.7 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.    



ஹோம் பட்டனுடன் இணைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ள எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவிக் சாரக்ஜ் 3.0 வசதி மற்றும் GPS/ A-GPS, GLONASS, யுஎஸ்பி 3.1 டைப் சி-போர்ட், ப்ளூடூத் 4.2, வைபை, மற்றும் என்எஃப்சி வசதி வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் IP67 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ: 

எச்டிசி யு11 ஸ்மார்ட்போனின் அறிமுக வீடியோவை இங்கு காணலாம்.,


Similar News