செய்திகள்

எச்டிசி யு 11, விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Published On 2017-05-14 21:32 IST   |   Update On 2017-05-14 21:32:00 IST
எச்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் யு 11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

எச்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் யு 11 ஸ்மார்ட்போன் மே 16-ந்தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்நிலையில், யு 11 ஸ்மார்ட்போனின் விலை அந்நிறுவனத்தின் முந்தைய வெளியீடான யு அல்ட்ராவை விட குறைவாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 

அதன்படி எச்டிசி யு 11 ஸ்மார்ட்போன் 659 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.42,302 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வித்தியாச அம்சங்களை கொண்டு வெளியாக இருக்கும் எச்டிசி யு 11 ஸ்மார்ட்போனில் முழுமையான மெட்டல் வடிவமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  
 
சிறப்பம்சங்களை பொருத்த வரை எச்டிசி யு 11-இல் 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கருப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் சாம்பல்  நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களில் எச்டிசி யு ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் QHD டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. இததுடன்  4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம். 

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி செல்ஃபி கேமராவும், 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

Similar News