செய்திகள்

சாம்சங் Z4 அறிமுகமானது, விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தகவல்

Published On 2017-05-13 20:08 IST   |   Update On 2017-05-13 20:08:00 IST
சாம்சங் நிறுவனம் டைசன் இயங்குதளம் கொண்டு இயங்கும் Z4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சாம்சங் தனது டைசன் இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. Z4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் இந்தியாவிலும் வெளியிடப்படும். 

மே 16 -17 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற இருக்கும் டைசன் டெவலப்பர் கான்ஃபெரன்ஸ் நிகழ்ச்சியிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோல்டு, சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் புதிய Z4 ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் WVGA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் Z4 ஸ்மார்ட்போனில் டைசன் ஓ.எஸ். 3.0 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. 



இத்துடன் 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 143 கிராம் எடை கொண்டுள்ள Z4 ஸ்மார்ட்போனில் 2050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ், எல்டிஇ கேட் 4 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங் Z4 ஸ்மார்ட்போனின் கேமராவை இயக்க சிறப்பான ஜெஸ்ட்யூர் வசதிகள்  வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முதல் முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஏற்ற எளிமையான இன்டர்ஃபேஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் புகைப்படங்களை வேகமாக எடுக்க கேமரா லான்ச் செய்ய ஏதுவான வசகதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Similar News