செய்திகள்

புதிய ஆப்பிள் வாட்ச் ஹாப்டிக் சென்சார்கள் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது

Published On 2016-12-22 21:56 IST   |   Update On 2016-12-22 21:56:00 IST
ஆப்பிள் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் அம்சங்கள் குறித்த தகவல்கள் இணைத்தில் கசிந்திருக்கின்றது.
புதுடெல்லி:

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் ஆப்பிள் வாட்ச் குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் வெளியகியுள்ளன. அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆப்பிள் பெற்றிருக்கும் காப்புரிமைகளில் ஆப்பிள் வாட்ச் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன் படி புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஹாப்டிக் சென்சார்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஹாப்டிக் சாதனங்களுடன் இணைந்து கன நேரத்தில் செயல்பட கூடியதாகும். இந்த தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வர இருக்கும் அழைப்புகள் மற்றும் இதர நோட்டிபிகேஷன்கள் குறித்து எச்சரிக்கை செய்யப்படும்.   

எனினும் இந்த அம்சத்தினை அடுத்து வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் கட்டாயம் வழங்கப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட ஆப்பிள் வாட்ச் சாதனங்களையே சரி செய்து மறு விற்பனை செய்து வருகிறது. இந்த விற்பனை அமெரிக்காவில் மட்டும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. 

ஆப்பிள் வரலாற்றில் ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் மறு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் வாட்ச் சாதனங்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிளின் ஆன்லைன் சந்தைகளில் ஆப்பிள் வாட்ச் 1 மற்றும் ஆப்பிள் வாட்ச் 2 சாதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

Similar News