இந்தியா
இளைஞர்கள் 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ்
- இந்தக் கருத்துக்கள் விசித்திரமானவை அல்லது பழமையானவை என்று எனக்குத் தெரியும்.
- ஆனால் இந்த கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் கூறியுள்ளார். இது இணைய தளத்தில் பேசும்பொருளாகியுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் "நான் சந்திக்கும் இளைய தொழில்முனைவோர்களிடம், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, 20 வயதிற்குள் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், தள்ளிப் போடக்கூடாது என அட்வைஸ் வழங்குகிறேன்.
சமூகத்திற்கும் அவர்களின் சொந்த மூதாதையர்களுக்கும் அவர்கள் தங்கள் மக்கள்தொகை கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். இந்தக் கருத்துக்கள் விசித்திரமானவை அல்லது பழமையானவை என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த கருத்துக்கள் மீண்டும் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.