இந்தியா

பூஜ்ஜியமான 'பைஜூஸ்' நிறுவன சொத்து மதிப்பு

Published On 2024-04-04 12:53 GMT   |   Update On 2024-04-04 12:53 GMT
  • பைஜூஸ் ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்
  • இதனால் அந்நிறுவன ஊழியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ரவீந்திரன் என்பவரால் பைஜூஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜூஸ், கல்வி உலகில் மாபெரும் நிறுவனமாக 2020 களில் வளர்ந்தது. கொரோனா காலத்தில் பலரும் ஆன்லைனில் கல்வி பயின்றதால், பைஜூஸ் நிறுவனம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

மேலும் 'போர்ப்ஸ்' பணக்கார பட்டியலில் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் இடம் பிடித்தார்.கோடிகளில் புரண்ட பைஜூஸ் நிறுவனம் கொரோனா காலம் முடிந்த பின்னர் சிக்கலை சந்திக்க தொடங்கியது.

கடந்த 2022 -ம் ஆண்டு முதல் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பித்தன. குறிப்பாக கணக்கு முறைகேடுகள், தவறான நிர்வாக அணுகுமுறை, பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என பெரிய சிக்கல்களை சந்தித்தது பைஜூஸ் நிறுவனம்.




மேலும் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்ததால், ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடந்தது.

பைஜூஸ் ஊழியர்கள் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளனர்.வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்து உள்ளது

இந்த சூழலில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக இருந்தது. இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்தது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News