இந்தியா

ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் அலுவலகம் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2024-06-26 11:14 IST   |   Update On 2024-06-26 11:14:00 IST
  • நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
  • நிலத்தை இழந்த நான் பலமுறை புகார் அளித்தும் கட்சித் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கா தேவி. இவர் விஜயவாடாவில் உள்ள துணை முதல் மந்திரி பவன் கல்யாண் அலுவலகம் அருகே வந்தார். பின்னர் துணை முதல் மந்திரி அலுவலகம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று வேகமாக மாடிக்கு ஓடினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துர்கா தேவியிடம் உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிவர்த்தி செய்து தருவதாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த துர்கா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் துர்கா தேவி போலீசாரிடம் கூறியதாவது:-

ஸ்ரீகாக்குளத்தில் உள்ள எங்களது நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் நிலத்தை இழந்த நான் பலமுறை புகார் அளித்தும் கட்சித் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News