null
குண்டுவெடிப்பா? வெடிவிபத்தா?.. காரில் அரியானா பதிவு எண்.. அரியானாவில் சிக்கிய வெடிபொருட்கள் - வலுக்கும் சந்தேகம்
- இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் திங்கள்கிழமை மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான காவல்துறை விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக சம்பவம் நேற்று அரியானாவில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.